Main Menu

சவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை இல்லை: உலக நாடுகள் வரவேற்பு!

உலகிலேயே கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் முதன்மை வகிக்கும் சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தினை சவுதி மக்கள் மட்டுமல்லாமல் உலகநாடுகளும் வரவேற்றுள்ளன.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், செய்யும் குற்றங்கள் அடிப்படையில் மிக கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக பொதுமக்கள் முன்னிலையில் தலையை துண்டிப்பது, கை மற்றும் விரல்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் மிக கொடூரமானவை.

இதில் அதிகமாக பாலியல் குற்றங்களுக்கு கசையடி தண்டனை வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்நிலையில், இனி கசையடி, தண்டனையாக வழங்கப்படாதுஎன, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

இவர்கள், பெண்களுக்கு வாக்குரிமை, வாகனம் ஓட்டும் உரிமை, கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி, உணவகங்களுக்கு செல்ல அனுமதி என பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளனர்.

பகிரவும்...