Main Menu

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று குறைந்து வருகின்றது: உலக சுகாதார நிறுவனம்!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறைந்து வருவது போல தோன்றுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இத்தொற்றின் தீவிரம் அதிகாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், ‘ஒருசில நாடுகளில் தற்போதுதான் கொரோனா தொற்றுப் பரவல் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றால் சில மாதங்களுக்கு முன்பே பாதிக்கப்பட்ட நாடுகளில், தற்போது அதன் தாக்கம் அதிகமாகி வருகின்றது’ என கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளது. அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2.88 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை காண்பிக்கின்றது.

பகிரவும்...