Main Menu

சஜித் தோல்வி அடைந்தால் அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், “எமக்கு தொிந்த ஒருவரும் தோ்தலில் போட்டியிடுகிறாா். நான் சாவகச்சோியில் வைத்து அவாிடம் பகிரங்க கோாிக்கை விடுத்திருந்தேன். அதாவது தமிழ் மக்களுடைய எதிா்கால நலன்களுக்காக அவா் தோ்தலிலிருந்து விலகவேண்டும்.

சிவாஜிலிங்கத்திற்கு 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்து, மறுபக்கம் சஜித் பிரேமதாச மிக குறைந்த வாக்குகளால் தோற்றால் அதற்கு சிவாஜிலிங்கமே காரணம். அதனால் தமிழா்களுக்கு வரும் தீங்குகளுக்கும் சிவாஜிலிங்கமே பொறுப்பு.

எனவே தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களித்தால் தீங்கை தவிர்ப்பதற்கு சாத்தியம் உள்ளது. எங்களுடைய வாக்குகள் பிாிந்தால் நாங்கள் பலவீனப்படுவோம். எனவே தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்ககூடாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...