Main Menu

கருணைக் கொலை குறித்த சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

கருணைக் கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத நம்பிக்கை அடிப்படையிலும், பிற காரணங்களுக்காகவும் அதிகளவானவர்கள் கருணைக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூஸிலாந்திலும் இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாத பொருளாக இருந்து வந்தது.

கருணைக் கொலைக்கு சட்ட அங்ககீகாரம் அளிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பல முறை கொண்டுவரப்பட்டது. எனினும் குறித்த சட்ட மூலம் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டு கால விவாதத்துக்குப் பின்னர் நேற்று(புதன்கிழமை) வாக்கெடுப்புக்கு விடப்பட்ட கருணைக் கொலை அனுமதிச் சட்ட மூலம் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 69 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

எனினும், இதற்குப் பிறகு நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் இந்த சட்டமூலத்திற்கு அதிகளவானவர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இது சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...