Main Menu

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை ; மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்ட பின்னர் ஏனைய வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களுடன் அவற்றை ஒப்பிட்டு தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தனியார் துறை எவ்வளவு பலம் பெற்றிருந்தாலும் அரச துறை இன்றி செயற்படுவது கடினமாகும். 1950 – 1960 காலப்பகுதிகயில் இலங்கையில் அரச துறை மிகவும் கீழ் மட்டத்திலேயே காணப்பட்டது. இதனால் அந்த காலப்பகுதியில் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இம் நாட்வர் இடம்பெயர்ந்து அந்த நாடுகளில் அரச உத்தியோகங்களில் சேர்ந்து அவற்றை விருத்தியடையச் செய்தனர். அதனாலேயே அந்த நாடுகள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து எம்மை விட விரைவாக முன்னேறியுள்ளன. எனினும் எம்மால் அதனை செய்ய முடியாமல் போயுள்ளது. எனவே தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச சேவைக்கு முக்கியத்துமளித்திருக்கிறார். அத்தோடு எமது அரசாங்கத்திலும் அரச சேவையினரின் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...