Main Menu

அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். 

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இத்தருணத்தில் எந்த விதமான எதிர்ப்பும் உருவாகப் போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி என்னால் அனுப்பபட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நான் உங்களுக்கு தெரிவித்திருந்தேன். இக் கடிதம் கிடைக்கப் பெற்றதென நீங்கள் எனக்கு அறிவித்திருந்த போதிலும் இது தொடர்பாக எது விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அண்மையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட புனர்வாழ்வு காலப்பகுதிக்கு பின்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என தெரிவித்திருந்தார். இதையே தான் நான் உங்களிடம் கோரியிருந்தேன் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் உங்களை ஜனாதிபதியாக்கிய எங்களுக்கு அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பெறும் ஆறுதலாக அமையும் என்பதை குறிப்பிட்டு தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...