Main Menu

கோடையில் மாணவர்கள் தன்னார்வ சேவைக்காக 5,000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்!

கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார்.

பிந்தைய இரண்டாம் நிலை மாணவர்களுக்கும் சமீபத்திய பட்டதாரிகளுக்கும் வழங்கப்படும் மானியம், தொற்றுநோய் தொடர்பான திட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கு 5,000 டொலர் வரை ஒரு முறை வழங்கப்படும்.

இது வேலை செய்யும் நேரத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். செலவழிக்கும் ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும், ஒரு மாணவர் 1,000 டொலர்களைப் பெறுவார். அதிகபட்சம் 500 மணி நேரத்திற்கு 5,000 டொலர்கள் பெறமுடியும்.

மானியத்திற்கு தகுதி பெறுவதற்கு, 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், கனேடிய குடிமகன், நிரந்தர வதிவாளர் அல்லது அகதி அந்தஸ்துள்ள மாணவராக இருக்க வேண்டும்.

ஜூன் 25 முதல் 2020 ஒக்டோபர் 31ஆம் திகதி வரை திரட்டப்பட்ட மணிநேரங்களை மட்டுமே கணக்கிட முடியும்.

பகிரவும்...