Main Menu

துப்பாக்கி வன்முறையில் இருந்து கனேடியர்களை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்: ட்ரூடோ

துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நம் நாடு இதுவரை கண்டிராத துப்பாக்கி வன்முறையை எதிர்ப்பதற்கான வலுவான நடவடிக்கைகள் என்று புதிய சட்டத்தைப் பற்றிப் பிரதமர் விபரித்தார்.

2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட துப்பாக்கித் தடை உட்பட மத்திய அரசாங்கம், அறிமுகப்படுத்திய முந்தைய கொள்கைகளைக் கடுமையாக்க இது விரும்புகிறது என்று அவர் விளக்கினார்.

இந்த வகை ஆயுதங்கள் முடிந்தவரை விரைவாக அதிக மக்களைக் கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை ஆயுதங்களுக்கு நம் தெருக்களிலோ அல்லது நமது சமூகத்திலோ இடமில்லை என்றும் கூறினார்.

கூடுதலாக, இந்த சட்டம் ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதற்கான உரிமத்தைப் பெற விரும்புவோருக்கான பின்னணி சரிபார்ப்புகளுக்கான விதிகளை வலுப்படுத்தும்.

முன்னோக்கிச் செல்லும்போது, இந்த சரிபார்ப்புகள் முந்தைய ஐந்து ஆண்டுகளில் மட்டும் எடுத்துக் கொள்ளாது, விண்ணப்பதாரரின் வாழ்நாள் வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் ட்ரூடோ விளக்கினார்.

பகிரவும்...