Main Menu

கொவிட்-19 நோய்த் தொற்றை கையாண்டதில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மிகப் பெருந்தோல்வி: கமலா ஹாரிஸ்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் மிகப் பெருந்தோல்வியை சந்தித்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உடா மாகாணத்தில் சால்ட் லேக் சிடியில் நேற்று (புதன்கிழமை) இரவு தேர்தல் பிரசார விவாதத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி நிர்வாகத்திலும் நேரிடாத பெருந்தோல்வி இது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்தது, நாட்டின் பொருளாதார சீர்குலைவு.

இந்த நிர்வாகத்தின் இயலாத் தன்மையால் அமெரிக்கர்கள் அளவுக்கதிகமாகத் தியாகம் செய்துவிட்டனர்’ என கூறினார்.

பகிரவும்...