Main Menu

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி!

தென்கிழக்கு ஆல்ப்ஸ் பகுதியில் உண்டான புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஆல்ப்ஸ் மரிடைம்ஸ் மாவட்டத்துக்கு பயணித்த மக்ரோன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், ப்ரெயில்-சுர்-ரோயா நகரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இம்மானுவல் மக்ரோன், ‘நாம் மிக விரைவாக இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புவோம். அவசரகால நிதி ஒதுக்கப்படும்’ என கூறினார்.

மேலும், மீட்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்ட அவர், வெள்ளம் ஒரு பேரிடர் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன் இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரங்கல் தெரிவித்தார்.

முதற்கட்டமாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக 50 மில்லியன் யூரோக்கள் நிதி அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு அடுத்து வரும் நாட்களில் மேலதிகமாக 100 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலினால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்ததோடு, எட்டு பேர் காணமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...