Main Menu

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 23,488பேர் பாதிக்கப்பட்டதோடு, 1,218பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடான அமெரிக்காவில், வைரஸ் தொற்றுக்கு 1,078,428பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 339,232 குணமடைந்துள்ளனர். 16,248பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்தோடு, தலைநகர் வொஷிங்டனில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 1,015பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆயிரம் உயிரிழப்பை கடந்த 18ஆவது மாநிலமாக வொஷிங்டன் மாறியுள்ளது.

பகிரவும்...