Main Menu

கொரோனா வைரஸ் தாக்கம் – இத்தாலியில் 233 பேர் உயிரிழப்பு!

உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை இத்தாலியில் 233 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, இத்தாலியின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், இத்தாலி முழுவதும் சினிமா தியட்டர், நாடக அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மறு அறிவிப்பு வரும்வரை மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவைக் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை 91 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த வைரஸினால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இத்தாலியில் 233 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 462லிருந்து 567 ஆக அதிகரித்துள்ளது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இத்தாலி பிரதமர் கான்டோ இந்த கரோனா வைரஸ் பணக்காரர்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதியிலிருந்து, ஏழைகள் அதிகமாக வாழும் தெற்குப்பகுதிக்கு பரவுகிறதா என்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இத்தாலியில் உள்ள 22 மண்டலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோம் நகரை உள்ளடக்கிய லாஜியா பிராந்தியம், பாரி நகரை உள்ளடக்கிய புக்லியா பிராந்தியம் ஆகியவற்றில் நேற்று தலா ஒருவர் உயிரிழந்தனர்.

பகிரவும்...