Main Menu

கொரோனா வைரஸால் – சிறை கைதிகள் விடுதலை!

அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“சிறு குற்றங்கள் செய்த கைதிகளை” நியூயார்க் விடுவிப்பதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கிளைவ்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

முன்னதாக, சிறை கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதுடன், அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி வரும் வேளையில், இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இரான், இந்த நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக சிறை கைதிகளை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...