Main Menu

கொரோனா தொடர்பாக யாழில் மேற் கொள்ளப்படும் மருத்துவ நடை முறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றிய விளக்கம் இதன்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடக சந்திப்பில் , யாழ். போதனா வைத்தியசாலைச் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறை சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலையின் தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பகிரவும்...