Main Menu

பொருளாதாரம் கடும் வீழ்ச்சி! – Banque de France

கொரோனா வைரஸ் காரணமாக பிரெஞ்சு பொருளாதாரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.  இன்று இத்தகவலை Banque de France (பிரான்ஸ் வங்கி) அறிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பிரெஞ்சு பொருளாதாரம் 6% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.  முன்னதாக 0.1% வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில். தற்போது 6% வீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்ளிருப்பு சட்டத்தால் வர்த்தகம், போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கள் கணிசமாக நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த பொருளாதாக வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை, பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான  INSEE, இது தொடராக மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பொருளாதாரம் 1.5% வீதத்தால் வீழ்ச்சியடைவதாக கணித்துள்ளது.

பகிரவும்...