Main Menu

கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் – பூனாவாலா

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா்.

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் அனுமதியை பெற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில், “முதலாவதாக மருத்துவ பணியாளா்கள்,  முதியவா்களுக்கு வரும் பெப்ரவரிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும்.

அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு 2 அல்லது 3 ஆண்டுகளாகலாம்.

தடுப்பூசி தயாரிப்பு அவற்றை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்வது மக்களுக்கு விநியோகிப்பது ஆகிவற்றால் கால தாமதம் ஆகலாம். அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டும்.

எனவே  தோராயமாக வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். இரண்டு வேளை கொரோனா தடுப்பூசிக்கான மருந்தின் விலை 1000 ரூபாயாக இருக்கலாம். இந்த தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...