Day: November 20, 2020
சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டியது- மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின்மேலும் படிக்க...
தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு
காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும், விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாரில் மாவீரர் தினம் நினைவு கூற தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக எதிர்வரும்மேலும் படிக்க...
தமிழ் மக்களை இழிவாகப் பேசிய பொலிஸ் பொறுப்பதிகாரி?
போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான பிரசாத்மேலும் படிக்க...
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் – பிடன் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் என தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் ட்ரம்ப்பின் அரசு நிர்வாகம்மேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மீது எத்தியோப்பியா குற்றச்சாட்டு!
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் டெட்ரோஸ் அதனோம் மீது, எத்தியோப்பியா குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரெஸ் அதனோம், தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாணத்துக்கு ஆதரவாக, பிறமேலும் படிக்க...
நடிகர் பிரபு தேவா இரகசிய திருமணம்?
நடிகர் பிரபுதேவா இரகசியமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்த பிரபு தேவா, தற்போது பிசியோதெரபி வைத்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அவருடைய அவருடையமேலும் படிக்க...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதைமேலும் படிக்க...
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!
உலகின் தலைசிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘லண்டன் 2020’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர்.பரபரப்பாக நடைபெற்றமேலும் படிக்க...
பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு!
மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPADகளில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகிமேலும் படிக்க...
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல்: உலகநாடுகள் கடும் அதிருப்தி!
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என உலகநாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து ஆகிய உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணிமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் – பூனாவாலா
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்துமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்துள்ளார். சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவுவதைக் கருத்திற்கொண்டு, கைதிகள் மற்றும்மேலும் படிக்க...
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி இந்திய மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்ட மீனவர்கள் தனது குழந்தைகளுடன் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற உதவும் கூகுள் வரைபடம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களை கூகுள் வரைபடத்தில் (Google Map) சுட்டிக்காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதனை தவிர்க்க முடியும் அல்லது அவதானமாக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வசதியானது அன்ரோயிட்மேலும் படிக்க...
மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.மேலும் படிக்க...