Main Menu

சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல்: உலகநாடுகள் கடும் அதிருப்தி!

சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என உலகநாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து ஆகிய உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.

அத்துடன் இவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரி உலகநாடுகள் சீனாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹொங்கொங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே சீனா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹொங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பதவி அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பகிரவும்...