Main Menu

கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது

கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன.

இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கார்ட் நிறுவனம், 3 வாரங்களில் அவற்றை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இவை தவிர குஜராத்தில் உள்ள வெக்ஸ்டர் பயோ லிமிற்றட் (Voxtur Bio Limited) விரைவில் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பகிரவும்...