Main Menu

ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க முதலில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மக்களுக்கு ஏற்படும் இன்னலைக் குறைக்க ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் சலுகைகள், நிதியுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துச் செயற்படுத்தியது.

இந்நிலையில், மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் உழவர்கள், தொழிலாளர்கள், வணிகத் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.

பொதுமக்களுக்கான நிதியுதவித் திட்டங்கள், பொருளாதாரச் சீரமைப்புக்கான திட்டங்கள் பற்றி இருவரும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துப் புதிய சலுகைகள், நிதியுதவித் திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பகிரவும்...