Main Menu

கொரோனாவை சமாளிக்க கடன் வழங்க IMF திட்டம்

கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியினை உலக நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நிதியத்தின்  நிர்வாக இயக்குநர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் நடைபெற்றது.

அதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மொத்தமாகவுள்ள 189 உறுப்பு நாடுகளில் 102 நாடுகள் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

1930 காலகட்டத்தில் ஏற்பட்ட மகா பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர் உலகை வாட்டும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவால் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 170 இற்கும் அதிகமான நாடுகளில் தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...