Main Menu

குறைந்த விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகள் விற்பனை

கோடைகால பயணச்சிட்டைகளை இதுவரை முன்பதிவு செய்யாதவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியினை SNCF அறிவித்துள்ளது.

இன்று ஜூலை 31 மற்றும் நாளை ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் குறைந்த விலையில் தொடருந்து பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. €29 – €39 மற்றும் €49 யூரோக்கள் விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மொத்தமாக 300,000 பயணச்சிட்டைகள் இந்த மலிவு விலை மூலமாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

பகிரவும்...