Main Menu

காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்

காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலக்கோட் பகுதிக்கு உள்பட்ட சன்டோட்டே கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை குறிவைத்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் குழந்தைகள் அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்தனர்.  

அப்பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினர் பள்ளிக்குள் சிக்கி தவித்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் குரல்களை செவிமடுத்து கேட்க வேண்டும். மேலும், காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...