Main Menu

கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி 

பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு  இந்தியாவிற்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. நூலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது, “அய்யா வைகுண்டர் நாரயணின் அவதாரம். வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணி பார்க்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு ஊறு ஏற்படும் போது கடவுள் நாரயணன் பல அவதாரமெடுக்கிறார். அப்படியான அவதாரமே வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்.

பகிரவும்...