Main Menu

ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்: உலக சுகாதார அமைப்பு

எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், ‘இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாம் மீண்டும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்திக்கப்போகிறோம்’ என கூறினார்.

கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், புதிதாக வைரஸ் பரவுபவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

55 ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

பகிரவும்...