Main Menu

எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசமைப்பு குறித்து எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும். அந்தவகையில், புதிய அரசமைப்புக்கு என்ன நடந்தது? என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதமொன்றை நடத்தவதற்கு கோரியிருந்தோம். அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 25ஆம்,  26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்பு முயற்சி தொடரும். இந்த விடயத்தில் ஜனாதிபதி பின்னிற்கின்றார் என்பதற்காக அந்த முயற்சியை நாம் கைவிடப்போவதில்லை. ஜனாதிபதி தலைகீழாக நின்றாலும் நாம்  இதனைச் செய்து முடிப்போம்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...