Main Menu

உலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ், மீண்டும் பின் தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது.

இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ்.

பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளினார்.

இப்போது பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இவர் எல்விஎம்எச் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டு தான் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

புளூம்பெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி, ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 125 பில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு 108 பில்லியன் டொலர் எனவும், பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 107 பில்லியன் டொலர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பகிரவும்...