Main Menu

உலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.

போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு 3.85 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலகில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ள யேமனுக்கு உதவ வளைகுடா நாடுகள் முன்வர வேண்டுமென ஐ.நா.வின் உதவித் தலைவர் மார்க் லோகொக் (Mark Lowcock) கேட்டுக் கொண்டுள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிடமிருந்து கிடைத்த பெரும் நன்கொடைகள் மற்றும் நிதியுதவி காரணமாக கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஐ.நா.வால் யேமனில் பஞ்சத்தைத் தடுக்க முடிந்தது என லோகொக் கூறியுள்ளார்.

எனினும், தற்போதைய கால நிலைமையில் உதவி நடவடிக்கைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவியைக் குறைத்து வருவதாகவும், இது ஜேர்மனியில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2020ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபைக்குத் தேவையான 3.4 பில்லியன் டொலரில், பாதியளவு நிதியுதவியே கிடைத்தது எனவும் இது, பெரும்பாலும் வளைகுடா நாடுகளின் சிறிய பங்களிப்புகளால் கிடைத்ததாகவும் லோகொக் கூறியுள்ளார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்குத் தேவையான நிதியுதவியை விரைவாகச் செய்ய வேண்டுமென அவர் வளைகுடா நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...