Main Menu

ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது.

தெற்கு பகுதியில் குயெங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது.

இதுதவிர ஈகுவடாரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லடகுங்கவா நகரில் உள்ள ஒரு சிறையிலும் கைதிகள் இடையில் கலவரம் ஏற்பட்டது.

இந்த மூன்று சிறைகளிலும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஆனால் அந்த சிறைகளில் தற்போது 38 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க இந்த 38,000 சிறை கைதிகளை கண்காணிக்க வெறும் 1,500 சிறைக்காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

பகிரவும்...