Main Menu

பிள்ளைகளைக் காட்டி விட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்- உறவுகள் தெரிவிப்பு!

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “குறைந்தபட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்திப்பை மேற்கொண்டோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகளாவார். இந்நிலையில், ஜனாதிபதி அந்தப் பிள்ளைகளைக் காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...