Main Menu

உத்தரப் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களில் 17 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன்  மீரட் நகரில் மட்டும் இதுவரை 78 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு போதுமானளவு மருத்துவ மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிலைமை குறித்து அறிய அம்மாநில அரசு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...