Main Menu

காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு இரத்து குறித்த விசாரணை இன்று!

ஜம்மு – காஸ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளன.

இந்த வழக்கினை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று முடிவெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு மத்திய அரசால் இரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை  நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே  இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என  மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...