Main Menu

இஸ்லாமிய மத போதகரை நாடு கடத்திய சுவிஸ்?

சுவிட்சர்லாந்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது
என தகவல் வெளியாகி உள்ளது.

உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் எத்தியோப்பிய நாட்டவர் என கருதப்பட்ட நிலையில், அவர் சோமாலிய நாட்டவர் என பின்னர் தெரியவந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் Winterthur பகுதியில் அமைந்துள்ள An’Nur மசூதியில், கலவரத்தை தூண்டும் வகையில் பிரிவினைவாத கருத்துகளை இவர் முன்வைத்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து தொடர்புடைய விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், அவரை நாடுகடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தை அடுத்து சர்ச்சைக்குரிய An’Nur மசூதி மூடப்பட்டது. மேலும், அந்த மசூதி தொடர்புடைய ஆறு பேர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் ஆதரவு குழுக்களுடன் இணைந்து போரிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

பகிரவும்...