Main Menu

இழுப்பறி நிலையில் இருக்கும் தொகுதி பங்கீடு : முக்கிய கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை!

தி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளன.

ம.தி.மு.க. – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்,  கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் ,  முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகள்,  ம.ம.க.விற்கு (மனிதநேய மக்கள் கட்சி) 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ம.தி.மு.க,  இரு கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டுள்ளன. இந்த கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க  தி.மு.க முன் வந்துள்ளது.

இருப்பினும் இது குறித்த பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் இழுப்பறி நிலை நீடிக்கின்றது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 பொதுத் தொகுதிகள் உள்ளிட்ட 7 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...