Day: March 4, 2021
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்!
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.மேலும் படிக்க...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் அனுமதி அளித்துள்ளார். வயதானவர்களுக்கு அதன் விளைவுகள் குறித்த போதிய தரவு இல்லை என்று கூறி, நாடு இதற்கு முன்னர் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது.மேலும் படிக்க...
சுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்!
தெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று (புதன்கிழமை) 15:00 மணிக்கு வெட்லாண்டாவின் மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த வழக்கை கொலைமேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின்மேலும் படிக்க...
மியன்மாரில் ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக் காரர்கள் சுட்டுக் கொலை!
மியன்மாரில் ஆட்சியைக் இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (புதன்கிழமை) யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலானமேலும் படிக்க...
ஈராக்கில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் பாதுகாப்பு குறித்து அச்சம்!
ஈராக்கில் மீண்டும் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதால், போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஈராக்கில் சுற்றுப்பயணம்மேலும் படிக்க...
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தேடுதல் நடவடிக்கை!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல், இன்று (வியாழக்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் தாஜ்மஹால் தற்காலிமாக மூடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைமேலும் படிக்க...
இழுப்பறி நிலையில் இருக்கும் தொகுதி பங்கீடு : முக்கிய கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை!
தி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளன. ம.தி.மு.க. – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தி.மு.க. கூட்டணியில் , முஸ்லிம் லீக்கிற்கு 3மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணையுங்கள்- மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சிமேலும் படிக்க...
வவுனியாவில் பேருந்து நடத்துனர், சாரதி மீது தாக்குதல் – முச்சக்கர வண்டியுடன் ஒருவர் கைது!
வவுனியா நகர் பகுதியில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் மற்றும் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நேற்றுமுன்தினம் (02) பிற்பகல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதியிடம் கையளிக்கப் படுகின்றது அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளைமேலும் படிக்க...
உளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம்- அமலநாயகி
எங்களை போராட்டங்களிலிருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்காக முயற்சியிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தமது குடும்பம் வரைமேலும் படிக்க...