Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொவிட்-19: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சுய தனிமைப் படுத்தல்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தொடரில் இம்மானுவேல் மக்ரோன் கலந்துக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஜேர்மனி அதிபர் அங்கலா மேர்கல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் தலைவர் உர்சுலா வெண்டர் லியன் உள்ளிப்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

பகிரவும்...