Main Menu

இல்-து-பிரான்ஸ் – பாடசாலைகளிற்கு முன்னதாகவே விடுமுறை விடுங்கள் – இல்-து-பிரான்ஸ் தலைவர்

இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலையில், பாடசாலைகளின் விடுமுறையை 15 நாட்களிற்கு முன்னதாகவே விடுவதற்கான கோரிக்கையை, இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) விடுத்துள்ளார்.

ஏப்ரல் 17ம் திகதி விட இருக்கும், வசந்தகால விடுறையை 15 நாட்களிற்கு முன்னதாக, ஏப்ரல் 2ம் திகதியே அறிவிக்குமாறு, கல்வியமைச்சிற்குக் கோரிக்கை விடுத்துள்ளார் வலெரி பெக்ரெஸ்.

பாடசாலைகளை மூடினால் பெற்றோர் வேலைகளிற்குச் செல்லமாட்டார்கள் என்று அரசாங்கம் கணிப்பிடும் நிலையில், விடுமுறை என்று அறிவித்தால், அதனைச் சாட்டிப் பெற்றோர் வீட்டில் நிற்க முடியாது என்பதால், கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கலாம் எனவும் இல்-து-பிரான்சின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...