Main Menu

இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடிக்கப் படவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்

ரஷிய படைகள் ஏறக்குறைய கார்கிவ் நகரை பிடித்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷியா குற்றம்சாட்டியது.

இந்திய மாணவர்கள், அரிந்தன் பாக்சிஉக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று 7-வது நாள் சண்டை நடைபெற்றது. 7-வது நாள் சண்டையில் உக்ரைனின் கிழக்குப் பகுதியான கார்கிவ் நகரை பிடிக்கும் வகையில் ரஷிய ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியது. கீவ் நகரில் இருந்து இந்தியர்கள், இந்திய மாணவர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்ட நிலையில் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக மேற்கு பகுதிக்கு ரெயில்கள் மூலம் வெளியேறும்படி இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியது.
இதனால் இந்தியர்கள், மாணவர்கள் கார்கிவ் நகரில் குவிந்தனர். அதேநேரத்தில் உக்ரைன் மக்களும் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரெயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காததால் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசுகையில், கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷிய ராணுவம் உதவ வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான், ஏறக்குறை நாங்கள் கார்கிவ் நகரை பிடித்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக என ரஷியா தரப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில் அப்படி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தன் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரிந்தன் பாக்சி கூறியதாவது:-
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பல மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரை விட்டு வெளியேறினர். அங்கு இந்திய மாணவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
கார்கிவ் மற்றும் அண்டை பகுதியில் இருந்து மாணவர்களை நாட்டின் மேற்கு பகுதிக்கு அழைத்து செல்ல சிறப்பு ரெயில்களுக்கு ஏற்பாடு செய்வதில் ஆதரவு அளிக்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம்.
ரஷியா, ருமேனியா, போலந்து, அங்கேரி, சுலோவாக்கியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளுடன் நாங்கள் திறம்பட ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறோம்.
சில நாட்களாக உக்ரைனில் இருந்து ஏராளமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளின் உதவியை நாங்கள் பாராட்டுகிறோம்.
உக்ரைனின் மேற்கத்திய அண்டை நாடுகள் இந்தியர்களை தங்கள் நாட்டுக்குள் அழைத்து வந்து அவர்கள் விமானங்களுக்கு காத்திருக்கும் வகையில் இடமளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...