Main Menu

பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes – குறைந்த கட்டணத்தில் புதிய தொடருந்து சேவைகள்

பரிசில் இருந்து புதிய குறைந்த கட்டணங்களிலான தொடருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன.

பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes நகரங்களுக்கிடையே இந்த இரு தொடருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. இந்த தொடருந்து சேவைகள் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் சேவைக்கு வரும் எனவும், Ouigo சேவைகளின் ஒரு பகுதியாக இவை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  

கட்டணமாக சிறுவர்களுக்கு €5 யூரோக்களில் இருந்தும், பெரியவர்களுக்கு €10 – €30 வரையும் கட்டணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு இரண்டு சேவைகள் வீதம் வாரம்தோறும் சேவைகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...