Main Menu

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.77 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,84,601 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 3617 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 3,22,512 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,28,724 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு  20,89,02,44  டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பகிரவும்...