Main Menu

இந்தியாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி

இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள்  பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’பின் வெட்ககேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் மட்டுமல்ல,  நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...