Main Menu

இத்தாலியின் நான்கு பிராந்தியங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு

இத்தாலியின் பிரதான நான்கு பிராந்தியங்கள் சிகப்பு அபாய வலயங்களாக கருதப்பட்டு முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம் போன்ற மிக முக்கியமான அறிவுறுத்தல்களுடன் குறித்த பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜியுசெப்பே கொண்டே (Giuseppe Conte) நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாளை (வெள்ளிக்கிழமை) முதல், வடக்கு இத்தாலியில் மூன்று பகுதிகளுக்கும் இத்தாலியின் தென் பிராந்தியத்தில் இருந்து ஒரு பகுதிக்குமாக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கையாகில் அமுல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

குறித்த கட்டுப்பட்டு நடவடிக்கையானது கொரோனா வைரஸின் புதிய தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கொரோனா தொற்றாளர்களால் வைத்தியசாலைகளில் ஏற்படும் நெருக்கடிகளை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய இரண்டு வாரங்கள் நீடிக்கப்படவுள்ள குறித்த முடக்க நடவடிக்கையில், 60 மில்லியனைக் கொண்ட இத்தாலிய சனத்தொகையில் ஏறக்குறைய 16.5 மில்லியன் மக்கள் உட்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...