Main Menu

ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுக்கு (Peter Szijjarto) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சான்விராகுல் கூறுகையில், ‘கம்போடியாவிலிருந்து வந்திருந்த ஹங்கேரி தூதுக்குழு உறுப்பினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர். சிஜார்டோவுக்கு மட்டும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர் பாம்ராஸ்னராதுரா தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் தனி விமானம் மூலம் அவர் ஹங்கேரிக்கு அனுப்பிவைக்கப்படுவார். அவருடன் வந்த 12 உறுப்பினர் குழுவினர் வேறு விமானம் மூலம் நாடு திரும்புவார்கள்’ என கூறினார்.

குறிப்பாக பொருளாதார விடயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஹங்கேரிய தூதுக்குழு இரண்டு நாள் விஜயம் செய்யவிருந்தது.

பகிரவும்...