Main Menu

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற் காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்!

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்’ என கூறினார்.

பைடன் நிர்வாகம் பியோங்யாங்கிற்கு எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை என்று பலமுறை கூறியுள்ளது.

ஆனால், ‘அதை நம்பும் நபர்கள் அல்லது நாடுகள் இருந்தால் அதனை அறிய தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இது விரோதமானது அல்ல என்று நம்புவதற்கு அவர்களின் நடவடிக்கைகளில் எந்த அடிப்படையும் இல்லை’ என கூறினார்.

சமீபத்திய வாரங்களில் வடகொரியா, நீண்ட தூர கப்பல் ஏவுகணை, ரயில் இருந்து ஏவும் ஏவுகணை, மற்றும் ஹைப்பர்சோனிக் என அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...