Main Menu

அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்

அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பாடத்திட்டத்தில் 2-வது மொழியாகச் சேர்க்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தற்போது தமிழ் மொழியை, பாடசாலைகளில் பயிற்றுவிக்க நியூ சவுத்வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

நியூ சவுத்வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் தமிழ் தவிர ஹிந்தி, பஞ்சாபி, பெர்சியன் மற்றும் மெசிடோனியா ஆகிய 5 மொழிகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதன்மூலம், நியூ சவுத்வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் இரண்டாம் மொழியாக பயிற்றுவிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...