Main Menu

ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு!

ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது.

ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விசா கெடுவை நீடிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்ரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக அவுஸ்ரேலியாவில் உள்ள ஹொங்கொங் மக்களுக்கு 5 வருடம் விசா நீடிப்பு வழங்கவும், இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஹொங்கொங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் அவுஸ்ரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் அவுஸ்ரேலியா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய தனது செயலுக்கான முழு விளைவையும் ஏற்கும் என சீனா எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, ஹொங்காங்கில் சர்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுலானதைக் காரணம் காட்டி, ஹொங்கொங்குடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா நிறுத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...