Main Menu

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; – மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்!

அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன  பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன.

புதன்கிழமை  வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

வெஸ்ட்பக்கின் பிரதம பொருளியல் நிபுணர் பில் இவான்ஸ் ஜூன் மாதத்திற்குள் 814,000 பேர்  வேலைகளை இழப்பார்கள் என  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரசினால் தாங்கள் பாதிப்பை  எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பல வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12

அவுஸ்திரேலியாவில் கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 68 வயது கொவிட் நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என குயின்லாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இருவர்  70 வயதினை தாண்டியவர்கள் என விக்டோரியாவின் பிரதம சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கும் பாதிப்பு

கொரோன வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் 200 ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

200 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என விக்டோரியாவின் காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை விக்டோரியாவில் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என காவல்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் போதியளவு முகக்கவசங்கள் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன ஆனால் அவற்றை காவல்துறையினருக்கு வழங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் விக்டோரியா காவல்துறை இதனை நிராகரித்துள்ளதுடன் போதியளவு உபகரணங்கள் உள்ளன அவற்றை தேவைக்கேற்ப விநியோகிப்போம் என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்கொண்டுள்ளனர் என சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உறுதியானலோ உடனடியாக காவல்நிலையத்தையும் வாகனங்களையும் சுத்தம் செய்கின்றோம் என விக்டோரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியாவின் சமூக  தனிமைப்படுத்தல் கொள்கையை மீறி சிட்னி விமானநிலையத்தில் பெருமளவானவர்கள் நெருக்கமாக காணப்படுவதை காண்பிக்கும்; வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

சிட்னியில் இன்று காலை இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்ட வீடியோவில் பலர் நெருக்கமாகயிருப்பதை காணமுடிந்துள்ளது.

வீடியோவை பதிவு செய்துள்ள நபர் பயணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா தன்வசம் உள்ள முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு கவசங்களின் கையிருப்பை பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் சீனா நிறுவனம்  தனது உற்பத்தி பொருட்களை சீனாவிற்கு மாத்திரம் அனுப்பிவருவதை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

பகிரவும்...