Main Menu

அவசரகால கொரோனா தடுப்பூசி பாவனைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு – சீனா

கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முழுமையாக நிறைவடைவதற்கு முன்னரே அதனை அவசரக்காலத் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஷெங் ஷோங்வேய் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியை அவசரக்காலத் திட்டத்தின்கீழ் சிலருக்குச் செலுத்திப் பயன்படுத்த தேசிய மருந்து சபை கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பிடம் ஜூன் மாதம் 29ஆம் திகதி தெரியப்படுத்தினோம். அந்த அமைப்பு அத்திட்டம் குறித்த புரிதலையும் ஆதரவையும் தெரிவித்தது” என குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த 3 கட்ட சோதனைகளை நிறைவு செய்வதற்கு முன்னரே, அந்த மருந்தை அவசரக் காலத் திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் அதிகம் நிறைந்த அத்தியாவசியப் பணியாளா்கள் பலருக்கு சீனா செலுத்தியது.

இதற்கு சா்வதேச மருத்துவ நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனா். இந்தச் சூழலில், சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...