Main Menu

நெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக் கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினைக் தடுக்கும் நோக்கில் நாடு அதன் முடக்க கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கிய ஒரு நாள் கழித்து இந்தப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

உலகின் மிக உயர்ந்த கொரோனா வைரஸ் தொற்று வீதத்தை வீழ்த்தும் முயற்சியில் செப்டம்பர் 18 அன்று இஸ்ரேல் நாடு தழுவிய இரண்டாவது முடக்கத்தினை அமுல்படுத்தியது.

இதனை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை, சர்வதேச பயணங்களை கட்டுப்படுத்துவது மற்றும் உட்புற பிரார்த்தனைகளில் கலந்துகொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

இதனை அடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் இருக்க இங்குள்ள மக்கள் கடைசி வாய்ப்பு என கூறியிருந்தார்.

இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக நெத்தன்யாகுக்கு எதிராக விசாரணைகள் காணப்படுகின்றபோதும் அவர் தனது அவற்றினை மறுப்பதாக கூறியுள்ளார்.

இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஒரு பிரதமரை பதவி விலகுமாறு இஸ்ரேலிய சட்டம் கட்டாயப்படுத்தாது. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஒன்பது மில்லியன் மக்கள் தொகையில் 225,000 நோய்த்தொற்றுகள் மற்றும் 1,417 இறப்புகள் இஸ்ரேலில் பதிவாகியுள்ளன, வெள்ளிக்கிழமை மட்டும் 8,200 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...