Main Menu

அயோத்தி விவகாரம் : அரசியல் தலையீட்டுடன் தீர்ப்பு வெளியாகியுள்ளது – திருமாவளவன்

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகின்றது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு, நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது எனவும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல, பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவ கூடாது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிரவும்...